Department of Tamil
The Department of Tamil at our institution is committed to preserving and promoting Tamil language and literature, while encouraging inter-lingual appreciation that transcends regional boundaries and fosters cultural understanding.
- About Us
- Vision & Mission
- HOD Desk
- BOS
- Faculty List
“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
வாளோடு முன் தோன்றிய மூத்த குடி!
நம் தமிழ்க்குடி, அப்பெருமையோடு கலை மற்றும் அறிவியல் புலம், விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், அறுபடை வீடு தொழில்நுட்ப வளாகத்தில் 2017 ஆம் ஆண்டு மொழிப்பாடம் பயிற்றுவித்தலை அடிப்படையாகக் கொண்டு துவங்கப் பெற்றது. மொழியை பாடமாகப் பயிலும் பிற துறை மாணவர்களுக்கு பயிற்றலில் ஊக்கமும், ஆக்கமும் ஏற்படும் வண்ணம் கற்பிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் மொழி கற்பித்தலோடு, தமிழ்த்துறையானது இளங்கலை தமிழ் மாணவர்களோடு இனிதே தற்போது பயணிக்கின்றது.
Vision:
தமிழ் மொழிப்பாடத் திட்டங்களின் மூலம் மொழித் திறனும் சமுதாய நோக்கமும் தெளிந்த அறிவும் பெற்றவர்களாக மாணவர்களை உருவாக்குவது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் நீதி போன்ற விழுமியங்களில் திறன் பெற்றவர்களாக விளங்கச் செய்வது இலக்காக அமைந்துள்ளது.
Mission:
- தமிழ் மொழியின் வளமை, வரலாற்றை அறிந்து கொள்ளச் செய்தல்.
- மரபு சார்ந்த இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவினைப் பெறச் செய்தல்.
- நவீன இலக்கியங்களைப் பிற அறிவுத்துறைகளுடன் இணைத்துக் கற்பித்துப் பன்முக ஆற்றலைப் பெருக்குதல்.
- மொழியின் வாயிலாக எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிகுந்தவர்களாக மாணவர்களை உருவாக்குதல்.
முனைவர் ப.ஜெயபாரதி.,
M.A., M.A., B.Ed.,MPhil., Ph.D., NET பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை தலைவர்
முனைவர்.ப.ஜெயபாரதி அவர்கள் தமிழ்த்துறையின் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறை தலைவராக கலை மற்றும் அறிவியல் புலம், ஏ.வி.ஐ.டி வளாகம், பையனூரில் பணிபுரிந்து வருகின்றார். இவர் பதினைந்து வருடம் பேராசிரிய பணி அனுபவம் பெற்றவர். தமிழில்; தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்பித்துள்ளார். இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் பெற்றுள்ளார். முதுகலையில் வரலாறு பட்டமும் பெற்றுள்ளார். மாநில அளவிலான செட், மற்றும் தேசிய அளவிலான நெட் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். நுண்கலை சார்ந்த தளத்தில் மிகுந்த ஆர்வமுடையவர். பல்வேறு பரிசுகள், மற்றும் சான்றிதழ்கள், விருதுகள் பெற்றுள்ளார். இவரின் ஆய்வுக்கட்டுரைகள் புத்தகமாக வெளிவந்துள்ளது.
“வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட
தோல்வி அடைந்தது எவ்வாறு என்று யோசித்தால்
நிச்சயமாக வெற்றி பெறலாம் ”
அனுபவங்களே வாழ்க்கைப் பாடங்கள். வாழ்வின் சுவாரஸ்யம் அனுபவங்களில் தான் உள்ளது. கற்றல் கற்பித்தல் அனுபவம் அலாதியானது. அதுவும் மொழிப்பாடம் கற்பித்தலில் உள்ள அனுபவம் சிறப்பானது. வாழ்வின் புரிதல்களுக்கு தமிழ் பாடம் துணையாகவுள்ளது. தொன்மை வாய்ந்த தமிழ்மொழியை கற்பதினால் பண்பாட்டு உணர்வும், படைப்பாற்றலும், மொழியறிவும், வாழ்வியல் நெறிகளும் மேம்படுகின்றது. தமிழின் சிறப்பு வார்த்தைகளால் அளவிட முடியாத தனிப்பெரும் வான்புகழ் கொண்டது.
2017 ஆம் ஆண்டில் கலை மற்றும் அறிவியல் புலம் சார்பில் மொழிப்பாடம் துவங்க பெற்று 2019 ஆம் ஆண்டு முதல்; இளங்கலை மற்றும் முதுகலை தமிழ்த்துறை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்த்துறை சார்பில் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் முத்தமிழாயம் என்ற அமைப்பின் மூலமாக இலக்கிய பதாகை பறப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று தமிழ்ச்சான்றோர், அறிஞர் பெருமக்களை அழைத்;து மாணவர்களுக்கு கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை, சொற்பொழிவுகள், சமூகம் சார்ந்த செயல்பாடுகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. இதனால் மாணவர்களின் கற்றல் திறனும், உலக பொதுநோக்க சிந்தனையும், படைப்பாற்றல் திறனும் அதிகரிக்கும். இனிவரும் காலங்களில் மாணவர்களின் வளர்ச்சி, திறமை, அறிவு ஆகியவற்றை மேம்படுத்தி நாளைய நல்ல தமிழ் அறிஞராக, தலைவராக, சொற்பொழிவாளராக, கவிஞராக, நடிகராக, ஓவியராக, இசைக் கலைஞராக பன்முக ஆளுமை கொண்டவராக உருவாக்குவதே தமிழ்த்துறை தலையாய நோக்கமாகும் என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
| S.No | Name & Designation | Particulars |
|---|---|---|
| 1 | Dr P.Jayabharathi, HOD & Professor, Dept of Tamil, SAS Chennai | Chair Person |
| 2 | Mr A.Muthukumar, Assistant Professor, Dept of Tamil, SAS Chennai | Member |
| 3 | Ms. G.mahalakshmi, Assistant Professor, Dept of Tamil, Vinayaka Mission's Kirupananda Variyar Arts and Science College, Salem | Member |
| 4 | Dr.M.Muthuvelu, Senior Professor (Retrd) Ex-Registrar, Central Institute of Classical Tamil Studies, Chennai | Academic Experts |
| S.No | Name | Qualification | Designation |
|---|---|---|---|
| 1 | Dr.P.Jayabharathi | M.A. | M.A. | B Ed. | M.Phil. | Ph.D. | NET | HOD & Associate Professor |
| 2 | Dr. Sreepriya. G. Nair | M.A. | B. Ed | Ph.D. | MBA. | HOD (Hindi) & Assistant Professor |
| 3 | Mr. A. Muthukumar | M.A. | B.Ed. | PGDCA | M.Phil. | SET | Assistant Professor |
| 4 | Mr. S. Palaniappa | M.A. | B.Ed. | M.Phil. | NET | Assistant Professor |
| 5 | Dr. K. Tamizh | M.A. | M.A. | M.Phil. | B.Ed. | Ph.D. | PDF | NET | Assistant Professor |
| 6 | Dr. S. Thiruvasagam | M.A. | M.Phil. | Ph.D. | NET | Assistant Professor |