Mr. S. Palaniyappa

திரு. சு. பழனியப்பா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை.
M.A.,| M.Phil.| B.Ed. |NET.,
திரு சு. பழனியப்பா அவர்கள் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சங்க இலக்கியம் தொடர்பான ஆய்வுப்பணியினை மேற்கொண்டு வருகிறார். இவர் தேசிய அளவிலான விரிவுரையாளர் தேர்வில் (2015) தேர்ச்சி பெற்றுள்ளார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil – 2011) பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத்தமிழ் (M.A., – 2006) மற்றும் இளங்கலைத் தமிழ் (BA -2004) பட்டமும் பெற்றுள்ளார். நல்லதங்காள் என்கிற நாட்டுப்புற கதையை நூலாக வெளியிட்டுள்ளார். பல மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தன்னம்பிக்கை ஊட்டுபவராக உள்ளார். மாணவர் சேர்க்கை பிரிவிலும், திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் முத்தமிழாயத்தின் அமைப்பு குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கு இலக்கியத்தின் வாயிலாக படைப்பாற்றலை வளர்த்து, மாணவர்களை ஆளுமைத்திறன் மிக்கவர்களாக உருவாக்குவதில் விருப்பம் கொண்டவர். நாட்டுப்புற இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு மாணவர்களுக்கு இசையோடு கூடிய கல்வியை புகட்டி வருபவர்.
