Mr. A. Muthukumar

திரு அ.முத்துக்குமார்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
M.A.| M.Phil.| B.Ed.| SET.| PGDCA.| DGT.,
திரு அ.முத்துக்குமார் அவர்கள் 27.8.2017 முதல் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பாரதியார் பல்கலைக்கழகத்தில் “சோ.தர்மனின் படைப்புகள் காட்டும் வாழ்வியல்” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வுப்பணியினை மேற்கொண்டும் வருகிறார். இவர் மாநில அளவிலான விரிவுரையாளர் தேர்வில் 2016 ஆம் ஆண்டில் (SET) தேர்ச்சி பெற்றுள்ளார்.
மதுரையில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மதுரைக் கல்லூரியிலும், முதுகலைத்தமிழ் (M.A.,) செந்தமிழ்க் கல்லூரியிலும் பயின்ற காலகட்டத்திலிருந்து நவீன நாடக குழுவான மணல்மகுடி நாடக நிலத்தின் நாடக நடிகராக பங்கு வகித்து வருகிறார். மேலும் இரண்டு முறை தேசிய நாடகப்பள்ளி (National School of Drama – Delhi) நடத்திய நாடக திருவிழாவில் “மிருக விதூஷகம்” “சூர்ப்பணங்கு” ஆகிய நவீன நாடகங்களில் நடித்து உள்ளார். மேலும் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு நாடகம் தொடர்பாக பயணித்த அனுபவம் உடையவர்.
கற்பிப்பதோடு இலக்கியம் சார்ந்த கூட்டங்களுக்குச் சென்று வருதல், புத்தகங்களை வாசிப்பதோடு அதனை முகநூல் மற்றும் பிளாக்ஸ் போன்றவற்றில் தொடர்ந்து எழுதியும் வருகிறார். தமிழ்த்துறை சார்பில் நடத்தப்படும் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் முத்தமிழாயம் அமைப்பில் 2017 முதல் இன்று வரை இணை ஒருங்கிணைப்புப் பணியினைச் செய்து வருகிறார். தமிழ்த்துறையின் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். 2021 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் சென்று ஆய்வுக்கட்டுரை வழங்கியவர்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்களுக்கு இலக்கியத்தின் வழியாக மொழியின் முக்கியத்துவத்தை அறிய செய்வதோடு, நன்மதிப்பு, மனித நேயம், நற்பண்புகள் கொண்ட மாணவச் சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
