Dr. TAMIZH K

முதுமுனைவர் க .தமிழ்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
M.A.| M.A.| M.Phil. | B.Ed.| Ph.D.| NET.
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை வளாகத்தின் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முதுமுனைவர் க.தமிழ் சிறந்த ஆய்வாளர், எழுத்தாளர் ஆவார் . 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இக்கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
“மேற்கணக்கு மற்றும் கீழ்க்கணக்கு நூல்களில் அகமரபுகள் ஒப்பிட்டாய்வு” என்கிற தலைப்பில் 2013 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் (Phd)பட்டம் பெற்றுள்ளார். “கருத்தாடல் நோக்கில் பாலைக்கலி” என்கிற தலைப்பில் 2007 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (MPhil)பட்டம் பெற்றவர். 2006 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலையில் தங்கப்பதக்கம் பெற்றார். 2008 ஆம் ஆண்டு NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர். 2018 ஆம் ஆண்டு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதுமுனைவர் பட்டம் பெற்றவர்.
சமூகம், இலக்கியம் குறித்த பார்வை கொண்டவர். எழுத்து துறையில் ஆர்வம் கொண்டு 15க்கும் மேற்பட்ட ஆய்வரங்கில் கட்டுரை வழங்கி உள்ளார். ஆசான் நினைவு பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக முத்தமிழ் விழாவில் கலந்து கொண்டுள்ளார். சென்னை பேராசிரியர்கள் இணைந்து நடத்தும் தமிழ் சங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளார்.
இவர் இளங்கலை படிக்கும் காலத்தில் இளம் எழுத்தாளர் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறந்த சேவைக்கான விருதும் பெற்றுள்ளார். 2010-2012 ஆம் ஆண்டு தொல்லியல் துறை நடத்திய முதுகலை பட்டயப்படிப்பில் தேர்ச்சியும், சைவ சித்தாந்தம் மற்றும் சிந்து சமவெளி பட்டயப் படிப்பிலும் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
தற்போது இக்கல்லூரியில் தமிழ்த்துறையில் ஆய்வியல் ஒருங்கிணைப்பாளராகவும், முனைவர் பட்ட படிப்பிற்கு அகமதிப்பீட்டு உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.
மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்தி பன்முகத்திறமையை வெளிக்கொணர்வதில் ஆர்வமுடையவர்.
