Dr. S. Thiruvasagam

முனைவர் சா திருவாசகம்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை.
M.A.| M.Phil.| Ph.D.| NET.,
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை வளாகத்தின் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சா. திருவாசகம் சிறந்த ஆய்வாளர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இக்கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
“தமிழ் மொழிபெயர்ப்பில் தலித் இலக்கியம்” என்கிற தலைப்பில் 2011 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் (Phd)பட்டம் பெற்றுள்ளார். ‘தலித் நாவல்களில் தலித் வாழ்வியல்” என்கிற தலைப்பில் 2005 ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர் (MPhil )பட்டம் பெற்றவர். 2004 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை பயின்றவர். பயிலும் போதே NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்.
சமூகம், கல்வி. திரைப்படம் குறித்த கூர்மையான அரசியல் பார்வை கொண்டவர். எழுத்து, மற்றும் காட்சி ஊடகத்துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர். சல்வா ஜூடும் (சிறுகதைகள்) கனவுடன் மல்லுக்கட்டும் கலைஞன் s(திரைப்பட கட்டுரைகள்), ஆர்ட்டிக்கிள் 15 (திரைப்பட ஆய்வு நூல்), கண்ணாடியைத் திருப்பியும் ஓடாத ஆட்டோ (சமூக, அரசியல் கட்டுரைகள்) ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட சில திரைப்படங்களில் எழுத்தாளராகப் பங்காற்றியுள்ளார்.
இவர் கடந்த ஓராண்டாக கலை அறிவியல் கல்லூரியின் நுண்கலை மன்றத்தின் (Fine arts club) ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முறையான பயிற்சிகள் அளித்து திறமைகளை மேம்படுத்தி வருகிறார். கதை, கவிதை, இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட கலைகளில் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதை செயல்படுத்தி வருகிறார். கற்பி, மனுஷி உள்ளிட்ட நாடகங்களை எழுதி அவற்றில் மாணவர்களை சிறப்பாக நடிக்க வைத்துள்ளார். மட்டுமின்றி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
சமூகத்திலுள்ள சாதி மத, இன, மொழி பிரிவினைகள் அகன்று சமத்துவ சமுதாயம் மலர வேண்டுமெனில் மாணவர்களுக்கு சமூகக் கல்வியைக் ‘கற்பி’க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளவர்.
