Dr. P. Jayabharathi
முனைவர் ப.ஜெயபாரதி
இணைப் பேராசிரியர், உதவி இயக்குநர் மற்றும் துறைத்தலைவர்
M.A.| M.A.| M.Phil.| B.Ed.| Ph.D.| SET.| NET.,
முனைவர் ப.ஜெயபாரதி அவர்கள் இரண்டு ஆண்டுகளாக உதவி இயக்குநராக உள்ளார். A&R Cellல் Student Welfare Coordinatorராக உள்ளார். நிர்வாகத்தில் (Administration) Finance and Compliance, All Clubs activity, Student Services, Faculty and staff Administration, General college Administration ஆகிய பொறுப்புகளில் உள்ளார். 19.7.2017 முதல் விநாயகா மிஷன்ஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் எழுத்தாளராக, இதழாசிரியாக, ஆய்வு நெறியாளராக, கல்வியாளராக, கவிஞராக, தன்னம்பிக்கை பேச்சாளராகவும் திகழ்கிறார்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் “விந்தன் நாவல்களில் இருத்தலியம்”என்ற தலைப்பில் உயர் பரிந்துரையுடன் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் விரிவுரையாளர் தேர்வில் (NET) மற்றும் (SET) தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) மற்றும் முதுகலைத்தமிழில் (M.A.,) மூன்று தங்கப்பதக்கங்களைப் பெற்றுள்ளார். பி.எட்., சேலம் சாரதா கல்லூரியிலும், பி.லிட் (இளங்கலை) பேரூர் தமிழ் கல்லூரியிலும் முடித்து, பல்கலைக்கழக முதல்தர தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். எம்.ஏ., வரலாறு பட்ட மேற்படிப்பில் மாண்மிகு மேனாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களிடம் பாராட்டுச்சான்றிழ் பெற்றார். வேல்ஸ் நிகர்நிலைப்பல்கலைக் கழக ஆராய்ச்சி கல்விக்குழுவின் உறுப்பினராகவும் (Martial Arts and Sports Academic) தற்காப்பு கலையின் முதன்மை ஆலோசராகவும் உள்ளார்.
கலை, ஓவியம், நடனம், நாடகம், நுண்கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டு பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றவர். பேராசிரியாக இருபத்தொரு ஆண்டுகள் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார்.
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருக்குறள் செம்மல் ந.மணிமொழியனார் முத்தமிழாயம் அமைப்பினை 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 21நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் 2021 – 2023 (Arts Bord – Chair Person) அமர்வு தலைவராகவும், தற்பொழுது தமிழ்த்துறையின் பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
2021 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் சென்று ஆய்வுக்கட்டுரை வழங்கியவர். அது நூலாகவும் வந்துள்ளது. 2025 ஜூன்-18 அன்று லண்டன் பாராளுமன்றத்தில் இவருக்கு ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வுமையமும் கிரைடான் தமிழ்ச்சங்கமும் இணைந்து HONOURING TAMIL SCHOLARS விருதினை வழங்கி கௌரவித்திருந்தனர். இவர் “நவீன இலக்கியத்தில் பெண்” என்ற நூலினைத் தொகுத்துள்ளார். இவர் UGC – Care Journal மற்றும் தேசிய, பன்னாட்டு அளவில் 50க்கும் மேற்பட்ட ஆய்வுகட்டுரைகளை வழங்கியுள்ளார். வெற்றிமுனை என்ற பன்னாட்டு இதழின் முதன்மை ஆசிரியராகவும் உள்ளார்.
போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார். ஒழுக்கம் சார்ந்த அறிவுடன் கூடிய கல்வியே சமூகத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தி நேர்மை, உண்மை, பொறுப்பு, அறநெறி, அன்பை வளர்க்கும் என்பதில் நம்பிக்கையுடையவர்.