• Support a drug-free India take the Nasha Mukt Bharat pledge at nmba.dosje.gov.in.

    image
  • Vinayaka Mission's Chennai Campus invites you to the Freshers' Orientation Program on 14th July 2025.

    image
  • PM Vidyalaxmi Education Loan Scheme Launched - Collateral-free loans for students of top institutions.

    image
  • Join us Movie Screening

    image
  • SUFFER A Journey through Life Hindi (Short Film)

    image
  • Movie Screening - 12th Fail

    image
  • A Session on Protecting Intellectual Property Rights (IPRs) and IP Management for Startups on account of World IPR Day

  • A Session on Protecting Intellectual Property Rights (IPRs) and IP Management for Startups on account of World IPR Day

SAS

School of Arts & Science

B.A. in Tamil

தமிழ் இலக்கியம் பட்டப்படிப்பு (B.A. Tamil Literature) மாணவர்களுக்கு தமிழின் தொன்மை, பண்பாடு, கலை, வரலாறு, விமர்சனம், மொழியியல் மற்றும் இக்காலப் இலக்கியம் குறித்து ஆழமாக அறிமுகப்படுத்துகிறது.

நோக்கங்கள்

சங்க இலக்கியம் முதல் இக்கால இலக்கியம் வரை மாணவர்களுக்கு விரிவான அறிவை அளித்தல். தமிழ் மொழியின் வளர்ச்சி, இலக்கணம், உரைநடை, கவிதை மற்றும் நாட்டுப்புறக் கலாச்சாரப் பாரம்பரியங்களை அறிமுகப்படுத்துதல். மொழியியல் மற்றும் விமர்சனக் கோட்பாடுகளைக் கற்பித்தலின் மூலம் மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை வளர்த்தல்.

காலம் & கட்டணம்

பாடக்குறிப்புகள் (Course Components)

  • சங்க இலக்கியம் – எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சங்க இலக்கியப் பின்னணி
  • அற இலக்கியம்
  • சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட காப்பியங்கள் மற்றும் சிற்றிலக்கியங்கள்
  • இலக்கணம் மற்றும் மொழியியல் – தொல்காப்பியம், நன்னூல், தமிழ் மொழி வரலாறு
  • நவீன இலக்கியம் – புதினம், சிறுகதை, நாடகம், நவீனக் கவிதை
  • தமிழக வரலாறும் பண்பாடும் – தமிழ் இலக்கிய வரலாறு, நாட்டுப்புற இலக்கியம், பழக்கவழக்கங்கள், சமூக வரலாறு.
  • பயன்பாட்டுப் பாடங்கள் – ஊடகம், பத்திரிகைத் தமிழ், மொழிபெயர்ப்பு, திறனாய்வு.

வேலை வாய்ப்புகள்

  • கல்லூரி, பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்
  • எழுத்தாளர், கவிஞர், ஆராய்ச்சியாளர்
  • பத்திரிகை மற்றும் ஊடகத் துறைகள்
  • மொழிபெயர்ப்பாளர்
  • அரசு மற்றும் தனியார் துறைகளில் நிர்வாக வாய்ப்புகள்
300+
Students Benefited

கல்விக் கட்டண உதவி

கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண் தரத்திற்கேற்ப கல்விக் கட்டண உதவியை அளிக்கிறது.

சிறப்பு கல்விக் கட்டண உதவி :

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதற்கேற்ப கல்விக் கட்டண சலுகை அளிக்கப்படும்.

  • விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை : தேசிய, மாநில, மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
  • முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.
  • மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

இளங்கலை தமிழ் இலக்கியம் – முக்கியக் கூறுகள்

  • சங்கம் முதல் நவீனம் வரை – தமிழ் இலக்கிய வளர்ச்சியின் அனைத்து பருவங்களும் (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிற்காலம், நவீன எழுத்து).

  • பல்துறை திறன்கள் – படைப்புத் திறன், விமர்சனத் திறன், மொழிபெயர்ப்பு, பத்திரிகை மற்றும் ஊடகத் திறன்கள்.

  • பண்பாட்டுப் புரிதல் – தமிழர் மரபு, நாட்டுப்புறக் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சமூக சிந்தனைகள் பற்றிய ஆழ்ந்த அறிவு.

  • அறிவியல் அணுகுமுறை – இலக்கணம், மொழியியல், இலக்கிய விமர்சனம் மூலம் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு திறன்.

  • தொழில் நோக்குப் பயிற்சி – கற்பித்தல், பத்திரிகை, ஊடகம், மொழிபெயர்ப்பு, படைப்புத் துறைகள் போன்றவற்றில் நேரடி பயிற்சி.

  • விழுமிய நெறிகள் – தமிழ் வழி நெறிமுறை, மனித நேயம், சமூகப் பொறுப்பு ஆகியவற்றை வலியுறுத்தல்.

  • வேலை வாய்ப்புகள் – அரசு, கல்வி, ஊடகம், இலக்கியம், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகள்.

  • முழுமையான இலக்கியப் பயணம்.

பாடத் திட்டம் ( பருவம் வாரியாக )

இளங்கலை தமிழ்ப் பாடத்தின் பாடத்திட்டம் CBCS அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்டு / பருவம் முதன்மைப் பாடம் (CC) மொழி / திறன் மேம்பாடு (AEC) திறன் மேம்பாடு / விருப்பப் பாடம் (DSE) Credits
முதல் ஆண்டு – பருவம் I இலக்கணம் – நன்னூல் எழுத்து தமிழ் மொழிப்பாடம் 1 ஆங்கில மொழிப்பாடம் 1 சுற்றுச் சூழல் அறிவியல் அற இலக்கியம் 22
முதல் ஆண்டு – பருவம் II இலக்கணம் – நன்னூல் சொல்லதிகாரம் சிற்றிலக்கியம் தமிழ் மொழிப்பாடம் II ஆங்கில மொழிப்பாடம் II திரைப்பட ரசனையும் குறும்பட தயாரிப்பும் 22
இரண்டாம் ஆண்டு பருவம் III புறப்பொருள் வெண்பாமாலை நாட்டுப்புறவியல் தமிழ் மொழிப்பாடம் III ஆங்கில மொழிப்பாடம் III தமிழ் இலக்கிய வரலாறு விளம்பரக்கலை 23
இரண்டாம் ஆண்டு பருவம் IV இலக்கணம் – நம்பியகப்பொருள் காப்பியம் தமிழ் மொழிப்பாடம் IV ஆங்கில மொழிப்பாடம் IV இதழியல் ஊடகவியல் 23
மூன்றாம் ஆண்டு – பருவம் V சங்க இலக்கியம் (எட்டுத்தொகை) தமிழ் மொழி வரலாறு English For Communication - 24
மூன்றாம் ஆண்டு – பருவம் VI சங்க இலக்கியம் (பத்துப்பாட்டு) இக்கால இலக்கியம் ஆய்வேடு - தமிழரின் மேலாண்மை சிந்தனைகள் 24

பாட தொகுப்பு

பாட வகை (Course Type) விளக்கம் (Description)
முனைவர் பட்டம் (Ph.D) தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், நாட்டுப்புறவியல், ஒப்பீட்டு ஆய்வு, கலாச்சார ஆய்வு போன்ற துறைகளில் மேம்பட்ட கல்வி மற்றும் தனித்துவமான ஆய்வை மையமாகக் கொண்ட முனைவர் நிலை ஆய்வு நிகழ்ச்சி. இது கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவங்கள், இலக்கிய ஆலோசனை, பதிப்பகம், கலாச்சார அமைப்புகள் போன்ற துறைகளில் பணியாற்ற மாணவர்களைத் தயார்படுத்துகிறது.
ஆய்வுக் கட்டுரை – I : ஆராய்ச்சி முறையியல் (Research Methodology) ஆராய்ச்சி வடிவமைப்பு, தரவு சேகரிப்பு முறைகள், தரநிலை (Qualitative) மற்றும் அளவியல் (Quantitative) ஆய்வு, இலக்கிய விமர்சன நுட்பங்கள், ஆய்வறிக்கை தயாரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஆயவுக் கட்டுரை – II : ஆய்வுத் துறை (Area of the Research) ஆராய்ச்சியாளர் தேர்ந்தெடுக்கும் நிபுணத்துவ துறையை (Specialization) அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக: சங்க இலக்கியம், நவீன இலக்கியம், செப்பேடுகள் (Epigraphy), நாட்டுப்புறவியல், இலக்கிய விமர்சனம், ஒப்பீட்டு இலக்கியம் போன்றவை.
ஆயவுக் கட்டுரை – III : விரிவான ஆய்வுத் துறை (Broad Field of the Study) முனைவர் பட்ட ஆய்வாளர் மேற்கொள்ள விரும்பும் பொதுத்துறையை (Broad Field) ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் பாடமாகும்.

ஐயங்களும் விடைகளும்

இந்தப் படிப்பு 3 ஆண்டுகள் நீடிக்கும், 6 செமஸ்டர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

ஆம், இந்தப் படிப்பு படிப்படியாக மாணவர்களின் தமிழ் மொழி மற்றும் இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆம், உள்ளகப் பயிற்சி மற்றும் திட்ட அடிப்படையிலான கற்றல் இந்தப் படிப்பின் முக்கிய அங்கங்களாகும்.

நிச்சயமாக முடியும். தேர்வுப் பாடங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பாடங்கள் மாணவர்களை இத்தகைய தொழில்களுக்கு தயார்படுத்துகின்றன.

நீங்கள் கற்பித்தல், பதிப்பகம், பத்திரிகைத்துறை, ஊடகம், பெருவணிக துறைகள் போன்ற துறைகளில் பணியாற்றலாம் அல்லது மேல்படிப்பு (M.A., M.Phil.,Ph.D.)தொடரலாம்.

Sticky Buttons with Announcements
Apply Now